Wednesday, 11 April 2012

என் பிரபஞ்சத்திற்கு,என் இனிய நண்பன் சிவத்திற்கு, இயற்கை எனும் பேராற்றல், 
பேரியக்க மண்டலத்திற்கு... எனது கோடான கோடி நன்றிகளை  வழியாக...
நான் உணரும் உணர்வுகள் வழியாக, ஒவ்வொரு கணமும்,நன்றி உணர்தலுடன் மகிழ்கிறேன்.நன்றி இறைவா.
எனதருமை பிரபஞ்சமே...எனக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றமெனும் நல்லெண்ணத்தை நன்மை தரும் உணர்வாக மாற்றி என்னை நம்பிக்கை கொள்ள, என்னை தேர்ந்தெடுத்த,உன் தாராள கருணைக்கு மனதார நன்றிகள் கோடி.கோடிகள் பலவும் நிலைத்தபுகழ் கொண்ட தன்னடக்கம் நிறையவும் அதனை புரிந்து கொண்ட தெய்வபத்தினிகள்  பலவும் அதனால் விளைந்த செல்வப்பயிர்கள் பலவும்,
ஆனந்தமுடன் அவர்கள் கூடி களிக்கும்  சூழ்நிலைகள் சொர்க்க புரியாகாவும்,எங்கும் எப்போதும் செல்ல சொகுசு வாகனங்கள் பலவும் என ஏற்றமிகு புகழ் தந்து எண்ணிலடங்கா செல்வங்கள் எல்லாம் தந்து எனைக்காக்கும் இயற்கையே...இறைவனே.. எனதருமைநட்புக்கு பாத்தியமான எனதன்பு 
பிரபஞ்சமே...நன்றி.நன்றி.இந்த நன்றியறிதலுடன் 
நன்றிஉணர்வுபெருக்கெடுக்க..என்னை எப்பொழுதும் நல்லெண்ண அலை வரிசையில் முதன்மைப்படுத்து.முழுமைபடுத்து.
கவரப்படும் அனைத்து பொருட்களிலும்...என்னை காந்தப்படுத்து.சாந்தப்படுத்து.நன்றிஇறைவா.நன்றி.ஆக, 
நன்றியே நம்பிக்கை. நம்பிக்கையே நம் விதி. அதாவது நம் பாதை.  நம்பிக்கை விதியே உங்கள் மனதின் விதி.உங்கள் மனம் செயல்படும் முறையில்  நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.அதாவது நம்பிக்கையின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்.என்பது தான் இதன் பொருள். உங்கள் மனம் எதை நம்புகிறதோ அதனையே சிந்தித்து கொண்டிருக்கிறது. எல்லாமே சாத்தியம். இதுவே சத்தியம்.ஆசையே திறன். ஆசையே தீரம். அனைத்தும் அனுபவிப்போம் ஆசை தீர. புறத்தின் ஆளுமை அகம்.
 ஆக நன்றிகளால் அகத்தை நிரப்புவோம். முழுமைகளால் முதன்மைப்படுவோம்.   

No comments:

Post a Comment