நான் பேரறிவாளன்எனக்கு பேரின்பமயமான எதிர்காலம், மேன்மை மிக்க
வாழ்வியல் அனுபவங்கள்,
சிறப்பு வாய்ந்த சிந்தனைக் குவியல்கள், பேராற்றல் பலத்தோடு...உற்சாக ஊற்றாக,
குதூகலத்தின் திலகமாக,
எல்லோருடனும் இணக்கமான இயல்பான... இப்படி எனக்காக காத்திருக்கும் அபிரிமிதங்களை என் ஆழ்மனம் மட்டுமே அறியும்..
நன்றியறிதலின் பக்கங்களுக்காக,உணர்வுடன்...
நன்றியறிதல் என்பது உயரிய சிந்தனை என்பதை காட்டிலும் மகத்தான சக்தி.நமக்கும், இந்த பிரபஞ்சத்திற்கும்,தொடர்பு அலைவரிசையே இந்த நன்றியறிதல் உணர்வு. எல்லை இல்லாத,எல்லா வித ஆற்றலும் கொண்டது. இந்த நன்றியறிதல்.
பேணிகாக்க வேண்டிய ஒரே தன் மானம்,இந்த நன்றியுணர்வை தான். பூஜிக்க வேண்டிய உயரிய பக்தி நிலை இந்த நன்றியறிதல்.
ரசிக்க வேண்டிய அழகு சிற்பம்...இந்த நன்றியுணர்வு.
ரசிக்க வேண்டிய அழகு சிற்பம்...இந்த நன்றியுணர்வு.
அப்படியானால் நன்றியை
உணர்வாக கொள்வதே மகத்துவம்.
உதாரணத்திற்கு. ஒரு வலி.தாங்க முடியாத வலி.
"இறைவா,சற்று நேரம் நின்றால் போதும்"என்ற சூழலில்...பின்-அந்த வலி இல்லாத நிலையில்,
நாம் கூறும் நன்றி இறைவனுக்கு ஏற்புடையதல்ல.
காரணம்,அது,மனித மாண்புக்கும் கூட உரித்தானதல்ல.வலி இல்லாத, சிறு இடைவெளி வேளையில் நாம் அனுபவித்த அந்த சூழல் தான்,
நம்முடைய அன்றாட வாழ்வியல் அனுபவம்.
ஆனால் ஒரு கணமாவது சிந்தித்திருப்போமா?
அல்லது சிந்திக்க வேண்டும் என்ற நல்லறிவாவது
நம்மை தடுத்திருக்குமா? இந்நிலை களைவதே...
நன்றியறிதல் பாடம்.உதாரணத்திற்கு ஒரு கால்குலேட்டர் வாங்கியிருக்கிறோம்... அல்லது
அன்றாட,அவசிய,பயன்பாடான தீப்பெட்டியாக கூட இருக்கலாம்...அந்த பொருளை முதலில் யார் கண்டு பிடித்திருப்பார்கள்?அல்லது அவர்களுக்கு எவ்வாறு?
அந்த தூண்டல் ஏற்பட்டிருக்கும் என்று சிந்திப்பதும் நன்றியறிதலின் முதல் கட்டம்.இன்னும் விளக்கமாக..நாம் பணம் கொடுத்து வாங்கி விட்டோம்,என்னுடையது.என்றால்....?அது வெறும் பொருளாக மட்டுமே நமக்கு பயன்படும்.அந்த பயன் பாட்டின் முழுமை,அதாவது சீரான சுகம்,நமக்கு தடையுறும்.நம்முடைய அன்றாட நிகழ்வுகளே நமக்கு சான்று.! எல்லாமும் இருந்தும்... எதுவும் இல்லாதிருப்பது போலே...நம் தேடலே... சான்றின் அடுத்த விளக்கமும்.
ஆக,
ஆக,
நன்றி உணர்தல் என்பது,
உங்களுடைய அந்த நன்றிக்காக, அந்த கால்குலேட்டர் உருவாக்கியவர்,
காத்திருக்கவில்லை.. ஆனால்
உங்களின் அந்த நன்றி உணர்தலின் வழியாக
அவரின் மூலம் அவரை தூண்டிய அந்த ஆழ்மனத்தின் பிரபஞ்ச சக்தியை நீங்கள் நினைவு கூற ஏதுவாகும்.அப்படியாயின்...,
அகன்ற இந்த பிரபஞ்சமே...நம்முடைய வெளிப்பாடு தான். என்ற பேருண்மையை அறியும் முயற்சியே இந்த நன்றி உணர்வு,.ஆக நன்றி என்றால் என்ன ? எதற்காக இந்த கேள்வி என்றால்?
நாம் நிறைய வார்த்தைகளை அதன் நிறை குறை அறியாமலே நம் பயன்பாட்டில் கொண்டுள்ளதால்
ஒரு நாளைக்கு ஓராயிரம் முறை நாம் நன்றி கூறுகிறோமே?இதில் என்ன புது அர்த்தம் இருக்க போகிறது..,?நன்றி என்றால் உதவிக்கு,அல்லது
உதவியதற்கு...இன் முகத்துடன் பாராட்டுவது.
அல்லது பெருமைபடுத்துவது.இப்பொழுது நன்றாக சிந்தியுங்கள்...உங்களில் எத்தனைபேர்...?நன்றியை,
இந்த அர்த்தத்துடன் எதிர்நோக்கி இருப்பீர்கள்?
அல்லது கூறியிருப்பீர்கள்?.நிச்சயமாக,
முரண் இல்லாத பதிலில்,நாம் ஒத்துக்கொண்டு
அடுத்த நிலைக்கு செல்வது கூட நன்றியறிதலின் மேன்மைகளின் ஒன்று. அதாவது அந்தந்த கணமே நன்றியறிதலின் சக்தி.அதை விட எளிதாக விளங்குவோமாயின்...உதவி கிடைத்த பின்
பாராட்டுவதை விட முன்னரே நன்றி பாராட்டுதலே
பிரபஞ்ச விதியின் செயல் விளக்கம்.அதாவது..
இறைவனை கண்ட பின் தான் நம்புவேன்,என்பதை காட்டிலும்,நான் காண விட்டாலும், காண முடியாவிட்டாலும் நம்புவேன்.என்பது மட்டுமே நம்பிக்கையின் மகத்துவம்.அது போலவே,
கிடைத்த பின் நன்றி பாராட்டுவதென்பது...பொதி சுமக்கும் கழுதைக்கு ஒப்பானது.கிடைக்க பெறப் போகும் உதவிக்கோ?உன்னதத்திற்கோ?முன்னரே நாம் நன்றி உணர்வுடன் பாராட்டுவதென்பது,
செயலுக்கு ஊக்கம் அளித்து அச்செயல் வெற்றியடைந்தற்க்கான ஆற்றல்,உங்களிடமே உள்ள தென்ற உண்மை உணரும் நிலையே இந்த நன்றி உணர்தல்.
இந்த மாத்திரை சாப்பிட்டால்
நிச்சயமாக "நான் குணமாகி விடுவேன்". என்ற நம்பிக்கைக்கும்...ஆதலால் இந்த மாத்திரையை பரிந்துரைத்த மருத்துவருக்கு நாம் கூறும் நன்றியே .. நம் நோய் தீரும், வழிகளுக்கான நியதி.
அப்படியானால் தீராத வியாதிக்கு? நம்பிக்கையில்லாதனம்.அல்லது நம்பிக்கையை
அல்லது நன்றியை வெறும் பொருளாக..., பணமாக கொண்டு, கஞ்சத்தனமான போக்கு ஒன்றே
தீராத வியாதிக்கான நிசப்தமான வெளிச்சம்.
அப்படியானால்..வறுமை காரணமாக.., பற்றாக் குறையினால்...,உள்ளவர்களின் நிலை?...? நன்றி.
இது நல்ல கேள்வி.முன்னரே நான் அறிவித்த நன்றியே...இதற்குண்டான பதிலை எடுத்தியம்பும்.
அதாவது,அபரிமிதங்களால் நிறைந்த இந்த பரந்த,
எல்லையில்லாத பிரபஞ்சத்தில் பற்றாக்குறை என்ற ஒன்று இல்லை என்பதை அறியாமல் இருப்பதுவே மிகமிக கேலிக்குரியது வேதனைக்குரியது.ஈர்ப்பு விதிக்கு தடை எற்படுத்துவது. காரணம்?அறியாமை என்ற போக்கு
பிற்போக்கு தனமான நிலைகளிலேயே நம்மை நிறுத்தும்.காரணம்?அறியாமை என்பதே நன்றியில்லாத தன்மை தான் ஆம். பிற்போக்குத்தனம் என்பது நிகழ்காலத்தில் நின்று கொண்டு இறந்த காலத்தின் அனுபவப்பதிவுகளை கொண்டே நம் வாழ்வை எதிர்நோக்குவதாலேயே இந்த சிக்கல்.அதாவது திரையில் கண்ட கதாபாத்திரத்தின் மரணத்திற்கு, கலங்குவதற்கு ஒப்பானது... இந்த வறுமையும்.இதனை எடுத்தியம்பும் அறியாமையும். இதனை மாற்றுகிறேன்...என்ற அரசியலமைப்பும்...,
இவர்கள் நம்மை உயர்த்திவிடுவார்கள்,என்று காத்து கிடக்கும்...அவ நம்புக்கைகளும்.
உட்சமே தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே.
பிரபஞ்சத்தை ஏவி
பிரபஞ்சத்தின் ஏவளுக்காக...
நன்றியறிதலுடன் காத்து நிற்கும்
எண்ணம் K


No comments:
Post a Comment