காதல்
காதலை
சீர் கெடுத்தது போதும்.
பல
இலட்ச
வார்த்தைகளில் ஒன்று.
காதல்
எனும்
ஓசை நயத்தின் விரிவு?
அவ்வளவுதானா?
காதல் என்பது
சுகத்தின் தேடல்.
சுயத்தின் முகவரி.
பரிணாமத்தின் நேர் எதிர் பொருள். மனதிற்கான நேர்மை.
மனிதர்களின் ஆறுதல்.
ஆம்
காதல் என்பது கண்ணியம்.
பூத்தலை புனிதமாக்கும்
பூவின் கண்ணியம்,
அழைப்பிதழை வனப்பாக்கி
வனத்தையே வசந்தமாக்க...
இந்த பூத்தல்
வண்டுகளுக்கான நேசம்.
மலரினுள் மகத்துவம் அல்லது
மலருக்குள் மகரந்தம் என்று
கலவை பாரம்பரியத்திற்க்கான வித்து.
இந்த கண்ணியம்.
மன்னிக்கவும்,
இந்த காதல்.
இந்த கண்ணியத்திற்குள்
சம புண்ணியம் தேடுவோம்.
காதலை போற்றுவோம்.
காதல் என்பது
புனிதம்.
ஆம்.
சில புனிதங்கள்
புதைக்கப்படாமல் இருப்பதற்கும்,
சில
அற்புதங்கள் அழிக்கப்படாமல்
இருந்ததற்கும்
ஒரு உணர்வு பாலம்,
இந்த காதல்.
எனக்கு
தெரிந்த
சில சொர்க்கங்கள் காதலால் சூழப்பட்டிருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்!
ஒருநூல் வித்தியாசமேயானாலும், அவ்வித்தியாசம் என்னும் பேதமையை
பிழையில்லாமல் நகர்த்தும் நிகழ்கால தவம்.
இந்தகாதல்.
பொறுமைக்கும்,
சகிப்பிற்க்கும்
பாடம் கற்றுத்தரும் புத்தன்,இந்த காதல்.
இது,
பூக்கும் ஓசையையும்,
திசையையும்,
எளிதில் கனிந்து விட முடியாது.
ஆம்
காதல் ஒரு
கால பைரவம்.
சுருங்கச்சொல்லின் வைபவ பெருவிழா. இதற்குள்
வரம்புகள் விதிப்பதும்,
வயதுகள் நிர்ணயிப்பதும்
காலப்பிழை.
ஆம்
காதலை காலமாகக் கொள்வோம்.
காலம் சிறக்க இதுவே நெறி.
ஆம்
பிழை மறைத்து காட்டும் மகத்துவம் வேறெதிலும் எத்தனிக்க வில்லையே!
காமம் என்ற புவிபடைத்து
காமம் என்ற புவிபடைத்து
அதில் கற்பென்ற நெருப்பை
விதைத்தாலும்,
குளிர்ச்சியையே
விளைச்சலாகத் தரும்.
தருவிக்கும்.
இந்த காதல் ஒரு வித முக்தியே.
பெருமைகளை விட்டொழித்து
மருமைகளில் வியாபித்து கொள்ள
காதல் கற்பிப்பது நல்லொழுக்கமே.
ஆம்
காதலுக்குள்ளே அனைத்தும்.
பரிவு பாசமென்ற
புவியியலும்,
அன்பு நேசமென்ற
பேரியக்க பேராற்றலும்,
கனிவு தேடலென்ற வேதியியல் மாற்றமும்,
நோன்பு - நுட்பம்
என்ற ஐக்கியம்
ஆக
காதலுக்குள்ளே அனைத்தும்.
அணைப்பதற்க்குண்டான
ஆரம்பம்
காமமாகவே உந்துவதானாலும்
காதலென்பது வினையே.
எதிர்வினையையே
இயக்கமாக கொண்ட
செயல்பாட்டு வினை
இந்த காதலில்
கற்றரியலாம்.
கற்பதும்
கற்பிப்பதும்
காதலிலே முழுமை பெறுகிறது.
உண்மையில்
முழுமை ஏற்படாத
முழுமைகளில்
திளைப்பது
இந்த காதல் திசையிலே.
இதுவே
இவ்வுலகத்திற்கான விசை.
சரணாகதிக்கான
தூய அர்த்தம்
இந்த காதல்.
இதுதான்
உண்மையில் மழலை பருவம்.
பெறுவதும்
பெற்றதும்
எதற்கென தெரியாமல்
அனுபவிக்க துடிக்கும்
அதிகார வர்க்கம்.
இந்த
காதல் புரிபவர்கள்.
காதலின்
நோக்கம் என்பது இன்பம்.
அதாவது
நிறைவு.
நிறைவென்பதில்
நீந்தி நீந்தி
நிறைவை நீட்டிக்கும்
இறையாண்மை,
இந்த காதல்.
படித்தறியாத பாமரனின்
பக்குவமே
இந்த காதல்.
பாதுகாத்தல்
என்ற நோக்கம்
பதுக்குதலில் ஆரம்பித்தது.
பதுக்குதலின் பாரம்பரியம்
பற்றாக்குறையால் அறியப்பட்டது.
பற்றாக்குறை என்பது
அபரிமிதங்களால்
ஆன
அற்புதங்களை
அளவிடமுடியாதது.
அப்படியானால்
காதல்
என்ற கனிம வேதங்கள்
முறையாக முற்றுபெறவில்லை,
அதன் பொருள்.
முழுமை பெறாத எவ்வுலகத்திற்க்கும்
நிறைவு சாத்தியமில்லை.
முழுமையை சக்தியாக கொண்டவர்களுக்கு
நிறைவு ஒரு சத்தியம்.
அதாவது
சிவம்.
அப்படியானால்...
விளைவும் விளைச்சலும்
விளைவும் விளைச்சலும்
பிரிந்த நிலையே
அதாவது
காதல் இல்லா நிலையே
பற்றாக்குறை.
ஆக
காதல் என்பது
அபரிமிதம்.
அற்புதம்.
அதிசயம்.
ஆதி.
மகிழ்ச்சி.
நிறைவு.
பேராற்றல்.
ஆதலால்
காதல் செய்வீர்.
காதல் என்பது
படைப்பாற்றல்.
நோக்கமில்லாத
நோன்பு.
விரக்தி இல்லாத விவேகம்.
வற்றாத ஜீவ நதி.
பெருங்கடல்.
சங்கமம்.
ஆக
காதலே நம் சங்கற்ப்பம்.
ஆம்
காதல் புரிவது தவம்.
காதலே புரிதல்.
காரணமில்லாமல்
களவாடல்
என்பது நிகழாது.
ஒவ்வொரு நிகழ்வுகளும்
ஒரு காரணத்திற்காக.
அதாவது
நம் விருப்பத்திற்காக.
முன்னம் விரும்பிய
நம் இன்பங்களை
நம் பேரியக்கம்
நமக்காக
நிகழ்த்துக்காட்டும்
ஒரு வானவேடிக்கையே
இன்றைய
நம் நிகழ்வுகள்.
அல்லது
நாம்
அறியப்படும் காரணங்கள்.
ஆக
காரணங்களாக
அறியப்படும் வரை
அது
வெறும் காரியங்களாக
அதாவது
கலவாடல்களாக...
ஆம்
நாம் விரும்பிய விருப்பத்திற்கான
நோக்கம்
மறந்த நிலையில்,
காணும் காட்சியின்
இந்த காதல்
என்ற
உணர்வு.
அதாவது
மறதியை மழுங்கடிக்கும்
ஒரு மகத்துவ நிலை.
ஆதலால்...
காதல் வசப்படுவீர்.
எல்லாம் வசமாகும்.
நன்மை k எல்லாம்.
காதலும் கடவுளும்
உணர உணரவே உணர்வாகும்
உன்னதம்.
வரம்பிற்க்குள்ளும்,
உறவுக்குள்ளும்,
காலச்சக்கரம் எனும்
கலாச்சாரத்திற்க்குள்ளும்
ஊடு பயிராக
சிதையும்
சிக்கலாக
கற்பென்பதே
முதலில் தோன்றிய
மன நெருக்கடி.
பின்னாளில் எல்லா
சவுக்கடிகளுக்குமான
காட்சி பிழை.
ஆக
காதல் கற்போம்
காதல் கற்பிப்போம்.
நன்மைkஎல்லாம்.
-எண்ணம்k.











