Tuesday, 10 April 2012

இது,பிற்போக்குத்தனமான-நம்முடைய இன்றைய சூழலுக்கான நிதர்சனம்.ஆம் இதுவும் ஓர் அகராதி.

                                                                                       அம்மா 
மூலம்.முதன்மை. உணர்வின் வெளிச்சம்.உச்சத்தின் விடை.
உயிரின் உறை.உள்ளது உள்ளபடியே யாயினும்  பரிணாமத்தின் முகவரி.
உயரம். என எல்லாமுமாய்.                                                    தெய்வம்
தெரியாதது.தெரிந்து கொள்ள  தூண்டுவது.தெரிந்தது. தெரிந்து கொள்ளாதது போல் இருப்பது.பொய் .இதுவே உண்மையில்  மெய்.
பொய்யிற்கும் மெய் பேசுவது. பேசப்படாதது.
பேசாதது.
                                                                             இறைமொழி
சிவன் சொத்து குல நாசம்.விந்தைபற்றியவிந்தை
                                                                                  வாழ்க்கை
நான்கு பேர் சம்மதத்துடன்..நான்கு பேராக மட்டும் மாறும் உரிமை.நான்கு பேருக்காக.. சுமந்ததிலிருந்து சுமக்கப்படும் வரை. நல்லதை தெரியாத,நன்மை பிடிக்காத உறவுகள்...
நண்பர்கள்....சுற்றம்.... உற்றார்-என நான்கு பேருக்காகவே என்ற பித்து நிலை.
                                                                                   மயக்கம்.
ஞானியாரின் விழிப்பு நிலை.
பால் தரும் கன்றை தின்பதா? 
என்பது தொட்டு,பாலை கறக்காத ஆடு கடல் புஷ்பம் 
என்ற மீன் வரை சைவம் பேசும் அக்றிணை  சொல்.
ஈர்ப்பு என்பது விசையா?
விளைவா? என்பதறியாமல் 
வினை என்ற கண் கொண்டு 
மேலிருந்து கீழா?கீழிருந்து மேலா ? என புரியாமல்...உயிருடன் இருந்த ஆப்பிள் வான் ஈர்ப்பு தீர்ந்தவுடன் கீழ் விழுந்தததை,புவி ஈர்ப்பு என கண்டு கொண்டு...
உயிரற்றதர்க்கான ஈர்ப்பை அடிப்படையாக கொண்டநமது கண்டு பிடிப்புகளை உயிருக்கான 
முன்னேற்றம் என கொள்வது.
                                                         அறிவியல் மருத்துவம்.
என்னையும் என் குடும்பத்தையும் ஒரு மிருகம் தாக்கலாம் என்பதற்காக,அல்லது தாக்குகிறது என்பதற்காக பலம் பொருந்திய மிருகத்தை 
நாங்களே வளர்த்ததனால் பின் மாண்டோம்., வளர்த்த மிருகத்தால்.வரும் என்ற மிருகம்  வரவில்லை.உண்மைதான்.நாங்கள் மாண்டதும்  உண்மைதான்.
                                                                                 விபச்சாரம்
கல்விச்சாலை.                கூலிக்கு பெறுவது                       கல்வியும்-கலவியும்.
                                         சுய இன்பம்
தனக்கு தானே முயற்சி செய்து தானே சம்பாதித்து 
சமுதாயத்தின் தனி மனித 
அர்த்தத்துடன் வாழ்வது.
                             ஓரினச்சேர்க்கை
ஆணுறை அணிவது. அல்லது 
குடும்பகட்டுபாடு செய்தபின் உடலுறவு கொள்வது.குறிப்பாக உயிர் உருவாகி விடகூடாதென்பதின்  ஒற்றுமை முயற்சி.
                                                                                            மடமை
குடும்பம் என்ற ஆலமரத்தை ஒரு விழுது, இரு விழுது போதும் என்றும்... அது தான் பாதுகாப்பு 
என்னும் எல்லை போட்ட அறிவாளித்தனம்.
                                                                                                ருசி
தேடல்.ஈர்ப்பு.கவர்ச்சி.வேகம்.ஆக,அடிப்படை
தெரியாமல்....தேர்ந்து,சேர்ந்து கொண்டது.
                                     பலாத்காரம்
பதினான்கு வயதில் பருவம் எய்திய விளை நிலத்தை விலை நிலமாக்க மனை பிரிப்பது,மணம் முடிப்பது.
இருபத்திரெண்டென்று,,,.
காலம் கழித்து. 
                                             கற்பழிப்பு
உணர்வென்ற அறிவை  நம்பாமல்  கட்டணம் தந்து கல்வியை திணிப்பது. பணம் கொண்டு மணம் கொள்வது.மரம் வெட்டுவது.மன்னிப்பு கோருவது.
நியாயம் தேடுவது.
                                                                                     நம்பிக்கை
ஆதாரத்துடன்...உடன் படிக்கை எழுதி அறுபது கையெழுத்துடன் பத்திரப்படுத்துவது.
                                                                                   அறியாமை
பிச்சை என்பது தெரியாத வேட்பாளர்களிடம் 
பிச்சை வாங்குவது. குழந்தைகளே செல்வம் 
என்பதை மறந்து செல்வம் இல்லை என்று 
குழந்தைகளை குறைப்பது பின் அதுவே 
அறிவாளித்தனம் என்று குரைப்பது.
                                                                                      பாதுகாப்பு
உயிர்கொல்லி மருந்து.அல்லது தூக்க மாத்திரை. 
அரசியல் தலைவர்கள். மத விற்பன்னர்கள்.
தொலைகாட்சி வானிலை அறிக்கை. 
                                                                                    ஆணுறை
படுக்கை போரின் கவசம்.ஆண்மை இழந்தவர்களின்  நம்பிக்கை.கற்பின் சூட்சுமம். 
உயிர் வேட்க்கையரியாத உடல் வேட்கையின் களவு.அரசாங்கத்தின் அறிவுரை. அழகியரின் ஆண்டவன்.அசிங்கம். மான பங்கத்தின் பங்காளி.
                                                                                   இலட்சியம்
கணவனை மதிக்க தெரியாத பெண்களின்.... 
குழந்தை பாசம்.குமரிகளின் தாபம் புரியாத,
சமுக ஆர்வலகளின் சமுதாய சேவை.
                                                          தொலைகாட்சி செய்தி 
தங்க விலை சரிவும். வரும் மழைக்கான வானிலை அறிக்கையும். 
                                              சர்க்கரை
நிச்சயம் ருசிக்கானதல்ல.
இன்று எல்லோர் உள்ளத்திலும்.
                                                      கூலி
விசுவாசம்.
நன்றி கெட்டத்தனம்.
                                                                                          சம்பளம்
நாணயத்திற்கான நாணயம் விடுதல்.                  கால் நடைகளின் உணவு.
                                                                                                    சூது
தர்மம் என்ற வார்த்தைக்கான நேரடி அர்த்தம்.
                                                                                                கடன்
நேர்வழி அல்லாத தீய வழிக்கான தேடல். பெறுவதிலிருந்து பெரும் தோற்று நோய். பரிதாபம்.பாவச்செயல்.                                 உறவுகளின் எல்லைகோடு.
                                                                                   தீண்டாமை
மனப்பாடம் செய்வது.
                                                                                             கற்பது
மனநோய்.பநோய். குண மற்றசெயல்.மணமற்ற செயல்
                                                                                             உணவு
கழிவுகளால் உருவாவது. கட்டாய கல்வி. நோயிற்கான தேடல். உளவியல் குற்றம். 
வன் சொல்.
                                                                                                மதம்
யானை போல காட்டுக்குள்ளும். நாட்டுக்குள்ளும். 
                                                                                          மனிதன்
ஓசைக்காக பிளவு பட்டவன். இரை தேடுவதிலிலேயே இரைச்சலானவன்.இறைச்சி.
இயற்கையை இம்சிப்பவன். போலியை மட்டுமே விரும்புபவன்.
                                                                           விஞ்ஞானிகள்
வக்கிரம்.குற்றவாளி.குளிர்ச்சியைஅனலாக்கியவன்.
கீழானவைகளில் மேலானவன். தொலைவதற்க்காக தேடுபவன். சந்தேகவாதி.
சந்தர்ப்பவாதி.எல்லாம் தெரிந்த பாமரன்.
ஒன்றும் தெரியாமல் ஒன்றி போனவர்கள்.
ஒன்றேன்டறியாமல்...,பரிணாம வளர்ச்சிக்கு 
தடை விதித்தவர்கள் 
                                                                                            ஞானம்
காக்கா குளியல்.நுனிப்புல் மேய்ச்சல்.வெற்றுச்சொல்.
எல்லோருக்கும் தெரிந்தது. 
எதுவும் தெரியாதது.
                                                     மம்
அகராதி.அடங்காதது. சர்வாதிகாரி.கோல் மூட்டி.
அர்த்த பேதம். உணர்வுக்கடிகாரம்.உடல் மேய்ந்த்தவன்.பறப்பன.
                                                                                               தாயி 
தாமதமான தாவரம்.தா என்பது ஈகையானது. ஈயை போல கழிவுகள் அறியாதது.கற்றாலும் கற்பித்தாலும் கலங்கம் இல்லாதது
                                                                                            குற்றம்
இந்நூலை இலவசமாக பெறுவது. 
                                                                                          புத்தகம்
கற்காமல்...அழகுக்காக அடுக்கி வைப்பது.
                                                                                                குரு
கோள்களில் ஒன்று.அறிந்த தீயவன். அறியாத ஆசிரியன்.ஆயிரம் பொய்களின் கூட்டுத்தலைவன்.ஆள் கொல்லி. மாண்றியாதது.உயிர் உள்ள ஜடம்.
                                                                                         அர்த்தம் 
இல்லாதது.ஆற்றலை அவனென்று,பின் அவள்  என்பது.பரந்து விரிந்த பரமானந்தத்தை பத்துக்கு பத்தில் சுருக்குவது.கண்கண்ட தெய்வம் என்று 
தாயை அநாதை இல்லத்தில் விடுவது.தாசி என்று பழிக்கும் காலைபொழுது தாயென்று முனகும் மாலைபொழுது. 
                                                                                        தாரம் 
தரம் அறியாதது.
                                                                                     அனுபவம் 
பொதி சுமப்பது.செரிமானத்திற்கு ஒவ்வாத இறைச்சி.புதைக்கப்படாத பிணம்.இம்சை. பித்தலாட்டதனம்.சுய உணர்வின் எதிரி.
சிந்தனையின் சோம்பல்.பொறுமையின் பிறப்பிடம்.அவமானத்தின் நண்பன்.
                                                                                              ஆசை 

எல்லோரும் எல்லாம் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள விட்டு விட சொல்வது.உயர்களின் உன்னதம்.இறையின் மறை பொருள்.வேதம்.   
                                         எண்ணம் k 
தன்னைத்தானே சுற்றி 
சூரியனையும் சுற்றும் பூமி போல....இவனும் தன்னை சாமியென்று கர்வித்து கொள்பவன்.ஆம்,தன்னை
தானே கற்பழித்து தானே தன்னை பிரசவித்துக் கொண்டவன்.   

No comments:

Post a Comment