Monday, 3 September 2012

நமக்கான 
நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் 
மொழி வகையிலான 
சில உதாரணங்கள் கொண்டு நம்மால் உணர முடியும்,
உணர்வுகளின் சத்தியத்தை. உதாரணத்திற்கு நிறைய இருப்பினும்...
ஒன்று 
நம் உள்ளத்திற்காக,,, 
நம் உயிரோட்டத்திற்காக,,, 
நம் அக நோட்டத்திற்காக,,,
பிரிவதற்கும் பின் சேருவதிற்க்கும் 
ஒரு நிகழ்வை காரணமாக்கி , 
அக்காரணத்தை ஓவியமாக்கி 
பின் அதனையே 
காவியாக்கி கொண்டு 
அதன் அற்புதங்களை பாராட்டும்... 
நம் அறிவுக்கண் கொண்டு 
அப்புராணத்தை ஆராய்வோமெனில்... 
பிரிக்க நினைத்தவருக்கும் 
பின்னாளில் சேர தவித்தவளுக்கும் 
உதவியதும் ஒரு மானே என்பது புலனாகும். 
அதாவது 
முன்னது புள்ளி மான் .
பின்னாளில் ,
அது அனுமான் .
கற்பனையின் உச்சத்திலும்... 
நம் சிந்தனையின் 
வெள்ளோட்டத்தில் 
நம் மனமே, 
அத்தனை 
அற்புதங்களையும் நிகழ்த்தும் கர்த்தா. 
அக்கர்த்தாவிற்கு ஒரு காரணமே 
நம் விருப்பம்.
பின் வெறுப்பு என எல்லாமே .. 
ஆக 
உயிரோட்டத்தின் 
அடிப்படையில் அமைந்த 
உணர்வென்ற உன்னதத்தில் 
செழித்து வளர்ந்த 
நம் மொழிஎன்னும் விந்தையே... 
பின் வார்த்தைகளாக.. 
வாழ்க்கையாக.. 
ஆம்.
அதுவே புள்ளிமான் என்ற 
மொழியரியாத 
ஆனால் 
உணர்வு கொண்ட,
மற்ற ஆதிக்க மிருகங்ககளுக்கு
உணவாகக் கூடிய.. 
ஒரு மிருக நிலையில் வாழும்.. 
அந்த புள்ளி மான், 
அனுபவ அறிவை 
ஆற்றலாகக் கொண்டு  
நம் அடிப்படை சக்தியான 
உணர்வின் ஆதிக்கத்தை மறந்த நிலையில் 
மனிதத்தை மயக்கும் மாயசக்தியாக
புள்ளிமானாக...
அழகு,
ரசனை என்று மறுத்தலித்து.. 
இப்படி.. 
இதனாலேயே.. நிகழ்ந்தது பிரிவு. 
இது 
அந்த இதிகாசத்தின் ஆழ்மையம்.
அதுவே அதனை தொடர்ந்து 
பின் மனதை அலைகழிக்கும் 
பல சம்பிரதாய காட்சிகளுக்கு அப்பால்.. 
உணர்வுள்ள அதே நிலயில் 
வேறொரு காட்சியமைப்பில் 
வேறு ஒரு மிருக நிலையிலும் 
உதவும் காரணத்திற்க்காக.. 
மனித உருவை காட்சியமைப்பாக 
கொண்ட அம்மிருகத்திற்க்கு 
அப்பெரும்புராணம் கொடுத்த 
அற்புத நாமம்
அதாவது 
பெயர் அனுமான்.
ஆக 
நம் விருப்பத்தின் 
உள்நோக்கம் சிந்தனைவயப்படுவது.
அச்சிந்தனையின் சத்தியமே.. 
இவ்விரு  உதாரணங்களும்,  
(அவ்விரு புராணங்களும்,) 
புள்ளிமான் என்றும் 
அனுமான் என்பதுவும் 
ஆக 
இதுவும் ஒரு அனுமானமே.. 
அதாவது யூகமே .. 
ஆம் 
இவ்வுகத்தின் முழுவியூகம்
சிந்தனையின் ஆக்கம். 

எல்லையில்லாத 
சாட்சி கொண்டு 
எண்ணிக்கையில்லா காட்சியாக விரியும் 
நம் எண்ணமே.. 
நம் கடவுள்.
அதாவது 
நம் உணர்வு.

எண்ணிக்கை கொண்டு முற்றுப்பெறாத.. 
முழுமையில்லாத 
அனுபவ அறிவின் 
ஆடம்பர உச்சத்தில் 
நம் கற்பனையின் கலக்கத்தில் 
உணர்வென்ற உன்னதத்தை 
இழந்து 
உணர்ச்சியின் அடிப்படையில் 
நகலுக்கு நகலெடுத்து  
நம்மை, 
நம் உணர்வை தவற விடும் 
நிலையில் இருந்து தப்பிக்க.. 
நமக்கு தேவை ஒன்று. 
அது நம்பிக்கை.. 
அதுவே கவனம்.
அதுவே இறைநிலை.
அதுவே முக்தி.

                                            நன்றியுடன்
                                  nmk @எண்ணம்k

No comments:

Post a Comment