நான் விளைந்தேன்
பின்பற்ற நான் வரவில்லை. பின்பற்றியும்
நான் வளரவில்லை.
முந்தி சென்ற
இரத்த அணுக்களில்
முதல் வித்தாகவே...
இன்னும் நான்.
நான் நானாகவே இன்றும்.
நன்மை k எல்லாம்.
இவ்வுயிர்க்கோர் உலகம் தந்து
பின் உடம்பும் தந்து
உடம்பிர்க்கோர் திறனும் தந்து
திறனோடு வாய்ப்பும் நல்கி
வாய்ப்பிற்கோர் வெற்றி சூழல் ஈந்து
பின் சன்மானமும் தந்து
அந்நிலையில் அவ்வுணர்வுக்கோர்
சந்தோசமும் தந்து...
இப்படியான...
இந்நாட்கள்...
நகர்வதற்கான ஈர்ப்பு விதியை
உளமார உணர்ந்து
உணர்வாகவே
எனை
உயர்வுபடுத்தும்
என் பிரபஞ்சத்திற்கு
என்றென்றும் நன்றிகள் கோடி.
நன்மை k எல்லாம்.
என்னை பாதுகாக்க யாரும் இல்லை என்ற உண்மை உணரப்பட்ட போது, நான் பாதுகாக்கவே
இங்கு எல்லோரும் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற எதார்த்தம் என்னை பக்குவப்படுத்தியது..
அன்று முதல் இன்று வரை,
நான் நானாகவே இருக்கிறேன்.
என்னைவிட பலசாலிகள் பலரை பார்க்கும் போதும்,
என்னை விட திறமைசாலிகளின்
திறன் கண்டு வியந்த போதும்...
நானாகவே,நான் இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன் அப்பொழுதெல்லாம்,
என்னை விட நான் வேறு யாராக இருந்திருந்தாலும்
நான் இவ்வாறு சுதந்திரமாக இருந்திருக்க முடியும்?
என வியந்திருக்கிறேன்.!
அவ்வியக்கத்தகு வியப்பே
என்னை
இவ்வியர்க்கையோடு இணைந்துள்ள
பேரியக்க பேராற்றலுக்குள்
இணைந்து
இறை கொண்டு
இணக்கமுடன்
என்னை சிவமாக
சக்தியாக
பரிபூரணமாக
என்னை பரப்பிரம்மமாக பாவிக்க
செய்கிறது பல சூழல்களில்.
நன்றி .

தன்
இயல்புகளை மறந்த
இந்த மனித சமுதாயத்திற்கு
என்
இயல்பே
மாறிக்கொண்டிருப்பது தான் என்பது, விந்தையாக வினவப்பட்டு வேடிக்கையாக ஏளனப்படுத்தப்படுகிறது.
காரணம்,
உலகில் மிக சுலபமானது புரிதல்.
அதை விட சுலபமானது புரியாதிருத்தல்.
ஆனால்
புரிந்து புரியாதிருக்கும் நிலையே அதிசுலபம்.
பெறுங்கள்.
பெறுவதை உணருங்கள்
பின் பெற்றதை போற்றுங்கள்.
பெறுவதே பேறு.
ஆம்.
தருவீர்கள்.
தருவது தர்மமாகும் நிலையில்
பெறுவது பேரின்பம்.
தருவது பெறுவதற்காக
பெறுவது தருவதற்காக..
தீர்ந்து போவதெல்லாம் தேர்ந்தெடுப்பதற்காக.
வறுமை என்பதுவும் வளத்திற்கான முன்னோட்டமே..
ஆம்
கணிதங்கள் கற்கும் போதே
புனிதங்கள் புதைக்கப்பட்டன.
கட்டாய கட்டிடங்களில்
கலாச்சார வன்முறைகள்.
முக மூடி அணிந்த
முன்னுதாரண அனுபவங்களால்
பெருமை எனும் பெருச்சாளியை
பாதுகாக்கவே,
வரைமுறை என்று மறுமைகளை பழிக்கும்
இவர்களின்
ஒழுக்க நெறி எனும்எறும்பு வேட்டை.
காணும் உருவங்களனைத்தும் நெகிழ்ந்த உணர்வுகளே ..
தோற்ற மயக்கங்கள் என்று புறந்தள்ளும் - புத்திசாலித்தனமே. மாயச்செயல்.
நீ படைத்திருக்கும் எதிரி
உன்னுள் உன்னுடைய இயல்பு.
நீ காணும் பாம்பு
உன்னுள் படிந்திருக்கும் உணர்ச்சி எனும் விஷம்
நீ கற்கும் ஞானங்கள்
உன்னுள் இருக்கும் தேடல்.
நீ காணும் இவ்வுலகம்
உன் எல்லையற்ற பொக்கிஷம்.
நீ காணும் மகத்துவம்
உன்னுள் உறைந்திருக்கும் பரம்பொருள்.
பண்பாடு எனும் ஒருமைப்பாட்டுக்குள்
ஒழிந்து கொண்டு,
ஓருயிர் ஒட்டுண்ணியாக
வாழும் கலை மறந்து
வெற்று களையாக
வேண்டா கரையாக..
கண்ணாடியில் உள்ள
நமது பிம்பங்கள் கூட அல்லாமல்
அப்பிம்பங்களின் நிழலோடு
பெருமை யுத்தம் தொடுத்து
படைப்பு சக்தியின் மகத்துவம்
பழிக்கும் கொடிய செயல் துறப்போம்
உணர்வை மதிப்போம்.
கண்கொண்டு காணுவது
நம் மகிழ்ச்சிக்காகவே..
அன்றி!
காட்சி மீது கருத்து பேதம் கொண்டு
வீண் பொறாமைகள்,
கடுமையின் விமர்சனங்கள்
என இவையெல்லாமே...
கண் திறந்த நிலையிலும்
கண்மூடித்தனமே.
விழியற்ற வீணர்களாக..
உணர்வற்ற ஜடங்களாக
செவியிழந்த நிலையில்
இசையின் ருசியை போற்றும் அற்புதமே..
நமது வாழ்வின் அன்றாட நிகழ்வுகள். அந்த இழிவான சூழல் என்ற
சுழல்களை இனி அழிப்போம்.
உள்ளுர ஊற்றெடுக்கும்
அந்த அற்புத உணர்வை போற்றுவோம்
எண்ணம்k
நன்மைkஎல்லாம். நன்றி




No comments:
Post a Comment