Tuesday, 15 May 2012

ஒரு மனிதனின் அர்த்தமுள்ள, 
அழகான... அவ நம்பிக்கையில்லா... ஆனந்த பூர்வமான அதாவது மனப்பூர்வமான,மகிழ்வான குதுகலத்துடன்,அபரிமிதமான ஆளுமையுடன் அனுபவம் நிறைந்த நிதானமும், அக்கரையுடன்.... 
வெறுப்பில்லாத நிம்மதி குணத்துடன்,தயாள நிறைவுடன்... தன்னடக்க உணர்வுடன், தியாக நிலையன்பு கொண்ட தியான நிலையே முதுமை பருவம்.ஞானம் என்பதின் விளைச்சல்.அதாவது 65 வயது முதல் 95 வயது வரை உள்ள,அவனது நீடித்த ஆயுளே அவனது வாழ்வின் அடையாளம்.இதுவே ஒவ்வொரு ஜனனத்தின் மூலநோக்கம்.அதாவது விழி மூடிய நிலையிலும் அகப்பார்வை கொள்ளும்... நம் ஜீவனின் முக்தி நிலையே முதுமை.
இது அறிவியலின் கணிதத்தால் வயதாயும்...பின்,
பயமாயும்...பின் தெளிவின்றி,மரணமாயும் 
நம் நம்பிக்கையில் அதாவது 
நம் நாடி நரம்புகளில் 
விரக்தியுணர்வை விதைத்த 
விடை தெரியாத விளையாட்டின் விபரீதம்.
ஆக நாம் கொண்ட வாழ்வின் 
அக நோக்கம்...கொண்டாட்டம்.இது பற்றாக்குறை இல்லாத முழுமைகளால் நிரம்பியுள்ள இறையின் கொடை.அபிரிமிதத்தின் சான்று.இந்த ஜீவன் 
அன்பென்ற கருணையால் வழிந்தோடும் ஜீவநதி.
இந்த பேருண்மைகளை ருசித்து ரசிக்கும் உன்னத பருவம் முதுமை.உண்மையில்...ஒரு விஞ்ஞான கூற்றில்,மிக தெளிவாக,சக்தி வாயிந்த திறன் மிகுந்த முழுபலம் கொண்ட உயரிய மகத்தான மனோ நிலையை அதாவது முழுமையை அறிவது 65 வயதிற்கு மேலான நிலையேஅதாவது
அம்முதுமையே...நம் தேடல்,ஆவல்.. நோக்கம்.
நம் வரம். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும்  உணர்ந்தமுதுமையே முக்தி. 

முக்தி என்பது நாம் 
நம் சிந்தனையை பலப்படுத்தி நம்மை ஊடுருவி பார்த்து உணர்ந்து, உருவான இச்சமுதாயத்தில் தன்னை மையப்படுத்தி மகிழ்வது.
அதாவது நல்லோர் சமுதாயமாக ஒரு குறிப்பை 
அதாவது தன் விருப்பங்களை மறைக்காமல்சம்பிரதாயகளுக்கு பயப்படாமல் 
தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளால் நம்மை அதாவது சமுதாயத்தை அதாவது நாம் சார்ந்த இந்த உறவுக்கூட்டத்திற்கு கட்டுப்படாமல் இறைவனை முன்னிறுத்தி நம் மனதை முழுமைப்படுத்தி அதனுள் எழுந்த எழுச்சியை அதாவது ஆசைகளை முதன்மைப்படுத்துவது 
எவ்வகை சிறப்போ? அவ்வகையில். அதனடிப் படையில் நம் அமைதிக்கான ஒரு பங்கமும் உண்டு.
ஆம். நமது குடும்பத்தை அதாவது இந்த உறவுச் சமுதாயத்தை ஏளனப்படுத்துவதும் ஆகும். அதாவது அவர்களின் நம்பிக்கைகளை 
அவநம்பிக்கையாக கண்டு மறுத்தலிப்பதும் ஆகும். ஆக ஆத்மார்த்த நிலையில் அனைத்தும் பரமமே.
இதுவே முக்தி.முதுமை. இதனை  உணரும் நிலையே...உண்மையில் இளமை.இதுவே

கொண்டாட்டங்களில் உயர்ந்த திருவிழா.உன்னத பெருவிழா
ஆம் இதுவே மழலைபருவம்.
ஆக வயதும்,நாளும்... 
நமதெண்ணமே.அப்படியாயின்,
நமதானதற்கான நமது உடைமைகளின்...தொகுப்பான நம தனுபவங்களின் கூற்றே கணிப்புகள்.கண்டு பிடிப்புகள். அதாவது எல்லா நிலையிலும் 
நிலையாமை என்ற இருப்புணர்வே எங்கும் நீக்கமற. நிலைத்து நிலைக்க. நிற்க!இப்புத்தகத்திற்கு 
நான் முதலில் வைத்த தலைப்பு அகராதி.பின் 
நான் வைத்தது,அதாவது.ஆதலாலே இதனுள்ளும் நிறைய அதாவது.ஆயினும் அனைத்தும் ஒரே அர்த்தத்திற்காக. இதனாலேயே இப்புத்தகத்திற்கு 
இப்போதைய தலைப்பு நன்றி.இனி எக்காலமும்.

காலம் 

மூன்றும்... 
கடந்தான், 
போற்றி.

No comments:

Post a Comment