சுதந்திரம்.
இவை
இரண்டுக்குமான நேர்மறைச்சிந்தனையே தற்பெருமை என்பதற்கும்
சுயமரியாதை என்பதற்குமான
இடைவெளி பேதம்.
என்னை விரும்ப
எல்லாமும் கிட்டும்.
இதுவே வேதம்.
என்னைப்பற்றிய சிந்தனை
மேலோங்க
என் மேன்மை
மிகத்தெளிவாக விளங்குகிறது.
என் சிறப்புகளில்
என் சிந்தனை சிலம்பமாடுகையில்... வெற்றி என்பது மட்டுமே
சுக ஆசனமிட்டு செழுமை பாக்கியமாக
எல்லோருடனும் இணக்கம் கொண்டு
இறையாக வியாபித்துள்ளது
என விளங்குகிறது.
என்னை விரும்புகையில் தான்
விருப்பமும் மேன்மை கொண்டது.
என்னை நேசிக்க தெரிந்த
பிறகு தான்
பிறரை மதிக்கும் மாண்பு புரிந்தது.
என்னை புரிந்த பின் தான்
சத்தியம் புரிந்தது.
உன்னை உலகம் புரிந்து கொண்டால் அது அதிர்ஷ்டம்.
உலகை நீ புரிந்து கொண்டால் அது ஞானம்.
ஞானமும் அதிஷ்டமும் வேறில்லை.
ஆற்றலும் அறிவும் கொண்ட சிவமது.
இயங்கும் போது சக்தி.
சூழ்ந்தழுத்தும்
தன் இறுக்க பேராற்றலில்
விளைந்த வின் சக்தியும்
காந்த சக்தியும்
அதன்பின் உருண்டோடும்
நுண் துகள்களான
வான் கோள்களும்-
அதன் ஈர்ப்பை கொண்ட
ஓருயிர் முதல் நீக்கமற அனைத்துமே
என்ற
அறிவியலின் கூற்று படி
அண்டமே பிண்டம்.
இதன் பேருண்மையே.. வெட்டவெளி அழுத்தம். அதாவது பேராற்றல்.
இதன்
ஈர்ப்பு விதியே மனிதனுக்குள்ளும் ஒழுங்கு விதியாக..
ஆர்வ தூண்டலாக
எழுச்சி கண்டு பிடிப்புகளாக..
இப்படியான
நம் மனித மகத்துவத்தில்
இன்றியமையாத ஒன்று...
அது உணர்வு.
குர்ரானில் கூறப்படும் வஹு
என்ற உள்ளுணர்வு....
அதாவது
தன்னை உணரும் அறிவே சிவம்.
அதுவே
இந்து தத்துவ விளக்கப்படி
அன்பே சிவம்.
உணர்வே அன்பு.
அறிதலே அன்பு.
இதுவே
மற்ற உயிர்கள்
அனைத்தில் நின்றும்
நம்மை வேறுபடுத்துவது.
இயல்பே மனிதனின் மகத்துவம்.
ஆக
தன்னை உணர்ந்தவன் ஞானி
தன்னை அறிந்தவன் வல்லுநர்.
என
இயல்பான அன்பை
வெளிப்படுத்தும்
தன்மை நிலையே இறைசக்தி.
ஆக
நானே பிரம்மம்.
இது
கர்வச்சொல் ஆகாது.
கர்வம் என்ற ஒரு சொல்
கர்மம் என்ற வினைக்கு உருவானது.
எப்படி அதிகாரத்தொனிக்கு
ஆணவம்
முறையானதோ அவ்வாறு.
அன்பென்ற உணர்வை
உன்னில் முன்னிலை படுத்த
மற்ற
அஞ்ஞானம் அற்று விழும்.
அன்பென்ற அலைவரிசையில்
நம் எண்ண ஓட்டங்கள்
சக்தி வாய்ந்த தன்மைகளாக
உருப்பெற்ற தோற்றங்களே
இந்த
உலகம் என்ற பிரபஞ்சம்.
இதனை
காணும் வேற்று பொருளாக
அதாவது
மூன்றாவது பாத்திரமாக பழக்கப்பட்டதாலே.. நமது பின்னோக்கிய தேடல்.
தேடலில் நின்று...
ஒரு சிறு உதாரணம்...
பார்வை என்ற காட்சிக்கு
அதாவது
விழிப்படலத்திர்க்கு
புலனாகும் ஈர்ப்பு விதி
அதாவது
காணும்
சக்தி முழுவதும்
இந்த காற்று மண்டலத்தில்
ஒரு அணுவாக -அறிவியல் கூற்று.
அப்படி இருக்கையில். நமது
இன்றியமையாத
மூச்சு காற்றான ஆக்சிஜனும்
ஒரு அணுவாக
இக்காற்றுக் குழுமத்திலே.
அப்படியானால்...
நாம் பேசுவது
மற்றவர்களுக்கு
புரிவதென்பதை காட்டிலும்
கேட்பது காது வழியே
அதுவும்
இந்த காற்றின் வழியே.
மொத்தத்தில் ஓசை
எழுவதற்க்குண்டான
ஒலி அலை உட்பட
அனைத்துமே
அறிவியல் சாசனப்படி
இந்த காற்றும்...
கூட்டு மூலப் பொருளான அணுவும்
என
இந்த வெட்டவெளிதனிலே.
அப்படி இருக்க...
ஒசைக்குண்டான
ஒரு வழிப்பாதையாக காதும்.
ஒளிக்காக
அதாவது
காட்சிக்கான
இருவழிப்பாதையாக விழிகளும்..
என
இவ்வாறே சுவாசமும்.
என
பிரித்தறிதல் நம்முள்ளே... நம்மால்
நமக்காக
இதனை
ஏன்
வெளியே தேடினோம்.
இன்னும் தேடுகிறோம்.
தெரியவில்லை.
அதாவது
நூறு வயது வாழவிரும்பி
எல்லா பிரார்த்தனைகளும்
நிகழ்த்தும் சாமானியன்
உட்பட அனைவருமே
நேரம் போக மறுக்கிறதே...
போர் அடிக்கிறதே என்று
புலம்பி தவிக்கும் குழப்பநிலைதான்
இந்த
அறிவியல் வளர்ச்சிக்கும்.
என்பதொருபுறம்மிருக்க.
ஊனமான
அதாவது
விழியின்றி/
செவிடாக
இப்படி
உருவாகும் குழந்தைக்கு
நம் விஞ்ஞான தேடல்
தந்துள்ள விளக்கம்
பரம்பரை கோளாறு.
அல்லது
பிறப்பில் உள்ள குறைபாடு..
அதாவது
சமமாக பகிர்ந்தளிக்கப்பட்ட பிரபஞ்ச விதிகள் அதாவது
சிவசொத்து
அதாவது
ஈர்ப்பு விசைகள்
வெட்ட வெளியில் இருந்து மின்சாரத்திற்காக நாம்
பிரிக்கும் ஒவ்வொரு ஆற்றல்களும் தான்/
காது கேளாமைக்கும்
விழிபார்வை இல்லாமைக்கும்.
என்ற தெளிவு விளங்குகிறதா>
குழம்பி தவிக்கும்
நெருக்கடி சுழளுக்காகவே
இந்த விளக்கமும் அன்றி.
தன்னையறிந்த தவப்புதல்வர்களுக்கல்ல.
உன்னை நேசி.
உன்னை
மட்டுமே நேசி. உன்னை கவனி. உன்னை
மட்டுமே கவனி.
உன்னை ரசி
உன்னை மட்டுமே ரசி.
நீ உனக்கானவன்.
உன்னை விரும்பு...
உலகில் உன்னதம் இதைவிட வேறில்லை.
நீயே அனைத்தும் என்பதை அறிய
இதுவே உயரிய நிலை.
உனது எண்ணம் பேரறிவால் நிரம்பியது.
உனது குணம் அனைத்து திறனும் உடையது. உனது தன்மையே இறை சொருபம்.
ஆதலாலே
இறைவனுக்கு
உருவம் தந்து
உணர்வாலே பூஜிக்க செய்தார்கள்.
நீயே தெய்வம்
என்பதை அறிவதற்காகவே.
அன்பென்ற சக்தியே முழுமையானது.
முதலானது.
எல்லாவற்றிற்கும் முடிவானது.
அன்பால் நீ
உன்னையே மூழ்கடி
நீ குளிர்ந்தால்
இப்பிரபஞ்சம் குளிரும்.
பிறரை நேசி.. என்பது பிற்போக்குவாதம் சபைக்கு உதவும்.
சமையளுக்குதவாது.
உன்
மகிழ்ச்சியை பேணுவதே அறம்.
நல்லறம் என்பது உன் மனமே.
மனதை தூய்மையாக்கு.
சுகப்படுத்து..
மகிழ்ச்சியை வென்றெடு
பின் கொண்டாடு.
இன்பம் உனக்கானது.
உன்
மகிழ்ச்சி உனக்கானது..
உன்னுடையது.
உன் துணையோ
உன் குழந்தையோ உன்னை பெற்றவர்களோ
உன்
மகிழ்ச்சிக்கு பங்குதாரர்கள் அல்ல.
பங்கேற்றுக்கொள்ள
நீ
ஒரு வாய்ப்பு தருகிறாய்
அவ்வளவே.
முதலில் வாய்ப்பிற்கும்
சூழ்நிலைக்கும் வித்தியாசம் உணர்.
வரம்பிற்க்கும்
வாழ்த்திற்கும்
அடையாளம் தேடு.
இணக்கத்திலும்
இன்பத்திலும் இறை தேடு.
நீயே சுவைக்கும் சுகிக்கும் உன்னதம். என்றுணர்வாய்.
வார்த்தை வழக்காடல்களில்
வாழ்க்கையை தேடி தொலைந்தது போதுமே..
உன் வீட்டிற்குள்
உன்னையே தேடுவதென்பது
உண்மையை இருட்டாக்குவது போலல்லவா>
இங்கு
யாரும் மேதையும் இல்லை யாரும் பேதையும் இல்லை. பொதுவுடமை
புரட்சி
பகுத்தறிவு
சித்தாந்தம்
சகோதரத்துவம்
சமாதானம்
என்று
குழுவாய் பிரிந்து
குழப்பமாய் ஜனித்தது போதும்.
உழைப்பு என்ற நிர்பந்தத்தையும்/
பட்டினி என்ற பித்தலாட்டத்தையும்
சம்பிரதாயம் என்ற
பொய்மையும் விடுத்து/
விடுதலை பெறு.
யாரும் தருவதும்
யாரும் பெறுவதும் அல்ல
செழுமையும் போகமும் நமதுடைமை.
செல்வமும் சுகமும்
நமது கடமை.
தொடர்வோம்///.
இனி அவ்வாறே
அகம் எவ்வாறோ
புறமும் அவ்வாறே.













No comments:
Post a Comment