குறைகளை சுட்டிகாட்டுதல்,
குறைகளை களைவதற்காக.. இப்படி 
கூட்டம் கூட்டமாக அலைந்து திரிவது, விழிப்புணர்வு பெற்றேன்,
ஞானம் கிடைத்தது.,
வேதத்தில் தெளிவு புரிந்தது..,
அறியாமை நீங்கியது 
என்று, இது போன்ற 
கூச்சல்கள் தான் 
முதலில் நம் குறைகள்.
 ஆனால் 
குறைகள்,தீயவை என்று 
தனியாக வேறொன்று இல்லை.
அனைத்தும் இறை ஆற்றல் என்றான பிறகு இதற்குள் 
இன்னொரு விளக்கம் என்பது 
நிச்சயம் பித்தலாட்டமே.
யாரும் கெட்டு விடவில்லை 
யாரும் சிரமத்தில் இல்லை.
முக்கியமாக 
யாரும் மூடர்கள் இல்லை. 

 எத்தணையாயிரம் அசுரர்களும் அரக்கர்களும் வந்து நம்மை ஆண்ட போதிலும் இறைத்தன்மை பொதுவுடமையாக இருக்கும் வரை,
இந்த பேருண்மையை 
நிலைத்த தன்மையாக 
இறுதிவரை உறுதியுடன் 
உள்ளத்தில் பேணுவோமாயின்         
நம் பார்வை விரிவடையும். 
சுருங்கும் போது தான் 
அனைத்தும் குறைகளாகவும்,
ஏற்ற தாழ்வுகளாகவும், 
குற்ற மேடுகளாகவும்,
அசுத்த கழிவுகளாகவும்,
தார்ப்பறிய தர்க்கங்களாகவும்,
நம்மை வேறுபடுத்தி
விகாரப்படுத்தும்.
உண்மையில் நமக்கு 
தெளிவு நாமே 
தர வேண்டும்.
பெற வேண்டும்.எவ்வாறு? 
அதுவே 
சுயநலம். 
சுகவிருப்பம். 
சிரமமில்லாத 
சிக்கலேதுமில்லாத 
சீர்பெரும் பாக்கியமே.. 
நம்மை அறிதல் 
அதாவது 
தன்னையுணர்தல்.. 
உள்ளம் எவ்வாறோ?
அவ்வாறே உலகம்.
மனம் சொல்வதற்கு செவிமடுத்தால்,
அச்செவி கூறும் 
பின் 
நற்செய்தி ஒன்று 
அந்த 
ஒன்றை 
வென்றார் யாரும் இல்லை.
ஆம் 
மனம் கூறுவதை கூர்ந்து   
  கவனித்தோமேயானால்  
நாமே மனம் என்றறிவோம்.
ஆனால் 
ஏன்?
இதனை 
நாம் எளிதாக கடக்கமுடியவில்லை 
என்றால்.. 
நம்முடைய தேடல் எதுவென்று? 
தெரியாமலே தீர்ந்து விடுவதனால்.. 
காரணம்..? 
நம்மை வழி நடத்தியவர்களும்,
வழி நடத்துபவர்களும், 
தானும் 
கற்று கொண்டிருக்கிறோம் என்பதை 
மறந்து 
கற்றுக் கொடுத்ததனால்
விளைந்த விளக்கங்களே...
இவ்வளவும்.

உள்ளிருக்கும் தன்னிகரில்லா 
பேராற்றல் துணைகொண்டு 
நாம் அடைந்தது தான்,
இந்த 
புறப்பொருட்கள் யாவும் ஆயினும் 
நாமே அப்புறப்பொருட்க்களின் மேல் இச்சை கொண்டு 
அந்த இச்சைக்காகவே.. கூட்டம் கூடமாக கூடுகின்றோம். காரணங்களும், 
காரியங்களும் வேறு வேறு படுத்தி கொண்டு.. ஒருவர் 
உடல் ஆரோக்கியம் என்கிறார்.
இன்னொருவர் ஆசையை விடு என்கிறார் அடுத்தவர் 
அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார். 
இப்படி தர்மம் என்றும் 
சத்தியம் என்றும்,
இதுதான் இறைவழி என்றும்,
இப்படி 
பல குழுக்கள் குழப்பங்களோடு. 
ஒருவர்  
சைவம்தான்  
இறைநோக்கம்  என்கிறார்.
இன்னொருவர் 
அசைவமும் இறைவன் 
படைத்ததுதான் என்கிறார். 
மேலைநாட்டு மருத்துவம் 
மிகக்கீழானது என்றார் 
இயற்கை வைத்தியக்காரர்,
பெருமையை கைவிடு 
தீயது நீங்கும் என்கிறார் 
உள்ளூர் தீர்க்கதரிசி.
ஆணவம் தவிர்.
அப்பழுக்கற்று இரு.. 
தனக்கென்று சேர்க்காதே
பிறருக்காக உழை.. 
வாரி வழங்கு..
வள்ளல் தன்மையே இறைவன்.. 

இப்படியான 
நெரிசல்களை விடுத்து.., 

முதலில் 
பெருமை உள்ள மனிதனே உயிருள்ளவன்.
உணர்வுள்ளவன். 

சில விஷயங்கள் கேட்பதற்க்கும்,
ள்வாங்குவதற்கும் 
சிரமமாகத்தான் இருக்கும்.
அர்த்தம் புரிந்து 
உற்று நோக்குவோமாயின்....
சிரமம் என்பது நம்முடைய 
அறியாமையாகவும்,
வீண் பிடிவாதமாகவும்,
அர்த்தமற்றதாகவும் இருக்கும்.
பேசுவதற்கும் கேட்பதற்கும் 
ஏதுவான பல விசயங்கள் 
நம்மை சிறைபடுத்தி 
சிக்கல் படுத்தி 
சிதறி..., 
சிரமங்களையே 
இலட்சியம் என்றும் 
மற்றவர்களுக்காக 
வாழ்வதே தியாகம் என்றும்...
நம்மை நாமே 
தாழ்த்தி 
குறை பட்டுக்கொள்வதே 
தர்மம் என்றும் 
மூடத்தனம் கொண்டோம்...
முற்றிலும் 
மறுப்பதே...

எங்கும் 
 நீக்கமற   
நிறைந்திருக்கும் சிவத்தை,பேரறிவாக 
கொண்ட மனிதனின் மகத்துவம். 
மனித வாழ்வில் 
தியாகம் என்ற 
வார்த்தையைவிட 
அசிங்கமானது 
அருவருப்பானது வேறில்லை.. 
இது சற்று வேடிக்கையாகவும் 
கொடூரமாகவும் தான்... 
மேலோட்டமாக தெரியும். 
உணர்ந்தேர்வீர்களேயானால்  
உணர்வு பெறுவீர்.
மெழுகுவர்த்தியாக  
கரைகிறேன் என்பது.., 
அவர்களுக்காக 
விட்டு கொடுத்தேன் 
என்பது போன்ற 
தியாக குணத்தை 
மேன்மை படுத்துவதான 
நமது வாழ்க்கை முறை 
உண்மையில் 
தன்னையும் அறியாமல் 
படைத்தவனின் 
ஆற்றலையும் உணராமல் 
பல ஜென்ம வாசனைகளையும் 
பற்றாகுறைகளையும்  
மனதில் பதியம் 
இட்டு வைத்ததின் 
எச்சம் தானே தவிர வேறில்லை ...
உண்மையில் 
தன்னுடைய 
சிறப்புகளை பற்றியே 
அதாவது 
தன்னுடைய 
பெருமைகளை பற்றியே 
சிந்தித்துணர்வதை 
போன்ற தியானம் வேறில்லை 

தன்னையே உயர்வாக காணவில்லை 
எனில் 
மற்றவர்களை   
மதிக்கும் 
மன நிலையோ குணநிலையோ எவ்வாறு வளரும்? 

தன்னை முன்னிலை படுத்துவது இரண்டு வகை 

1.தன் பொறுமையின் அடிப்படையில்-     ஆக்கப்பூர்வமானது. 
2 .தன் இயலாமையின் அடிப்படையில்,இது அழிவுப்பூர்வமானது. 
இயற்க்கைக்கு இணக்கமற்றது 

தன் ஆசைகளை கட்டுப்படுத்துவதும் 
அதற்கு 
ஏதேதோ காரணங்கள் கூறி திரிவதும்,
நம் இயலாமைகளை 
ஒத்தென்பதை காட்டிலும்,
 நம் 
 சிறப்புகளை 
 நாம் உணராததேயாகும்.

மற்றவர்களுக்காக விட்டு கொடுத்தேன் 
என்ற 
நம் தியாக மனப்பாண்மை 
இயற்கையை 
பழிப்பது போன்ற மகா மட்டமான செயல் பற்றாக்குறை என்பது 
உங்கள் அனுபவ அறிவுக்குதானே தவிர 
படைத்த 
அந்த 
பேரறிவாளனுக்கல்ல.

நம் பெருமைகளையே 
நாம் காண 
நம் எண்ணம் 
மேன்மை பெரும். 

தன்னை நிரப்பிக்கொள்வதே மற்றவர்களுக்கு 
 நாம் இட்டுக்கொள்ளும் உயரிய நிலை.. 

யாரும் யாருக்கும் தர முடியாது.தரக்கூடாது என்ற நிலையே.. இயற்கையின் விதி.
உலகம் பொது...       
உயிரினங்கள் பொது,
உணர்வுகள் பொது 
உண்மையும் பொது,
உரிமையும் ஆசைகளும் பொது அனுபவங்ககளும் பொது 
அறிவும் பொது 
ஆற்றலும் பொது 

இதில் 
யார் இல்லாதவர்கள்? 
யார் அதிகம் பெற்றவர்கள்?

தியாகம் என்ற தீயச்சொல்லே ஏற்றத்தாழ்வுகளின் முதலாளி.

இதனை தொட்டதே 
அடுத்தடுத்த 
நமது பலகீனம்.. 

எளிமையே சிறப்பு .. ஏழ்மையே 
அறம் ஒத்த பண்பு.. 

செல்வம்மிருந்தால் 
கர்வம் விளையும். 
இது போன்ற தந்திரங்கள் நிறைந்த வார்த்தைகள் அனைத்திலும், 
தன்னை 
உணரத் தெரியாத 
போலி செல்வந்தர்களும் 
உதவாக்கரை 
மதக்குருமார்களும் 
சுய நினைவற்ற 
அரச குடி மூத்தவர்களும் 
தனக்கு கிடைத்த சுகபோகத்தை 
மற்றவர்கள் அனுபவித்து விடக்கூடாதென்று உருவாக்கிய மமதை செயல்.
அதாவது 
வெறிபிடித்த மதயானை செயல்.
காரணம்... 
அவர்களின் சுகபோகத்தை கூட  
இது தனக்ககுண்டானது,
என்று அறியாமலே... 
அது 
ஏதோ, 
குறுக்கு வழியில் தான்,
இந்த சுக போகம் சாத்தியம் என்று.. 

குருடன் செவிடனுக்கு 
கூறியது போல் 
நாமும் கேள்வி கேட்க 
இயலாத ஊமைகளாக 
இன்றளவும் 
பிறவிச்சுகம் இழந்தோம்.
அதாவது 
பிறவியை பின்னுக்கு தள்ளினோம்.
பயன் பெறுதலை இழந்து. 

சுகமும் 
 செல்வமும் 
   ஆரோக்கியமுமே 

இயற்கையோடு 
   இறைவனோடு 
        நாம் இணங்கி 
            இருக்கும் 
              அரும் பெரும் 
                   தவநிலை.
  
இதனை 
கருத்தில் கொண்ட 
கல்வி முறையையே 
நாம் கையாள்வோம்.
அதில் முதலாவது  
நாம் ஒவ்வொருவரும் 
நம்முடைய 
கடமை என்ற முயற்சி  
அதாவது 
உழைப்பு.
அதாவது 
பாடுபடுவது. 
அதாவது 
கஷ்டப்படுவது என்ற 
இழி குணத்தை விடுவது. 
அதற்கு முன் 
 நம்முடைய சுகத்தை 
பற்றிய கருத்தை 
         நம் முன்னுரிமையாக செய்து 
நாம் அனைவரும் செல்வந்தர்கள். 
சுகம் வேண்டாம் என்று 
கூறுபவர்கள் 
யாரேனும் நம்மில் உண்டா? 
அல்லது 
அப்படி ஒருவராவது?
இப்பாரினில்  
இருப்பாரெனில்... 
   [அப்படியாயின் ]
நாம் பயிற்றுவிக்கபட்டிருக்கிறோம்.
வறுமை என்றும்,   
நம்க்கிதெல்லாம் முடியாது என்றும்,
இது போன்ற 
சாப வார்த்தைகளை 
நாம் 
நம்மையறியாமல் கற்றுணர்ந்துள்ளோம். முதலில் 
அதனை களைவோம். 

உன்னுள் தோன்றும் அனைத்துவிதமான ஆசைகளையும் விரும்பு.. 

விரும்புவதை தருபவன் உன் இறைவன் 
அவன் உனக்குள்ளே. 
உனது எண்ணமாக அப்படியாயின்... 

கெட்டதென்ற ஒன்று நிச்சயமாக இல்லை இப்புவியில்.
 தண்டனை என்ற ஒன்று 
  யாரும் 
எதற்காகவும் வழங்க முடியாது.
காரணம், 
இயற்கை நம்மை மகத்தான படைப்பாக ஒழுங்கு விதியுடன் படைத்திருக்கிறது.. 
நம்முடைய அறியாமை யாவும் 
நம் பலம் 
நாம் உணராததேயாகும்.   
பலம் என்ற வார்த்தைக்கு 
இன்னொரு  
அர்த்தம் நமக்கு தேவைபடுமேயானால்.. 

இயற்கையோடு இணங்கி அனைத்துக்கும் ஆசைப்படும் நமது குணமே பலம் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தம். 

அதுவே பேராற்றல்.
 அதுவே சிவம்.
 சிவம்,நாம் காணும் இயற்கையானால்..
 காணும் நாமே. சக்தி.
 ஆக 
சிவமும் சக்தியும் வேறு வேறில்லை. 
அறிவும் ஆற்றலும் 
வேறு வேறாக 
நிச்சயம் இருக்க இயலாது.
இதுவே பொது விதி.
 ஆக 
ஆன்மிகம் அதாவது பேருண்மை 
அறிவதே அறிவியல். 
அறிவியல் உணர்ந்தால் 
  நம் சிறப்பு விளங்கும் 
விளங்கினால்... 
வியப்பு தோன்றும்,
 வியாபிக்க தோன்றும்.
 அதுவே வளர்ச்சி நிலை. 
அதுவே பரிணாமம்.     

இந்த சங்கிலி தொடர்புக்கு தடையாக இருப்பதுவும் 
நமது அறிவே. அதாவது 
நேற்றைய கடந்த 
கால அனுபவ அறிவை 
கொண்டு நம்மால் ஆகாது.
 நம்மால் இயலாது.
 நம் நிலை இவ்வளவு தான்.
  இதற்க்கு மேல் 
ஆசைபடுவது பேராசை என்று 
 நம் அற்ப அறிவால், 
 தியாகம் என்றும்
  உழைக்கிறேன் என்றும்
நமது பின்னோக்கிய பயணம் 
வறுமையிலும் 
நோயிலும் 
 பற்றாகுறையிலும் 
இயலாமையிலுமான 
நிலையில். 

நம்மை நிறுத்தி,
 இயல்பானதை சிந்தித்துணர்வோம்.
   
சிந்தனை நமது பாக்கியம் .